உங்கள் மனைவி/காதலிக்கு இந்த 7 அம்சங்கள் இருந்தா, நீங்க ரொம்ப அதிர்ஷ்டசாலின்னு தெரியுமா?

பொதுவாக ஆண்கள் தங்களது மனதிற்கு பிடித்தவாறு ஓர் அழகான பெண் அமைந்தாலே, தான் ஒரு அதிர்ஷ்டசாலி என்று நினைத்துக் கொள்வார்கள். ஆனால் பாவிஷ்ய புராணம், குறிப்பிட்ட ஏழு அம்சங்கள் நிறைந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்பவர்கள் அதிர்ஷ்டசாலி என கூறுகிறது. இக்கட்டுரையில் அந்த ஏழு அம்சங்கள் என்னவென்று கொடுக்கப்பட்டுள்ளது. அவ்வம்சங்கள் உங்கள் மனைவி அல்லது காதலிக்கு இருந்தால், இவ்வுலகில் நீங்கள் மாபெரும் அதிர்ஷ்டசாலிகள் என்று அர்த்தமாம். சரி, இப்போது அந்த அம்சங்கள் என்னவென்று பார்ப்போமா...!


அம்சம் #1 
உங்கள் காதலி அல்லது மனைவியின் கழுத்தில் கோடுகள் நன்கு தென்பட்டால், அப்பெண்ணைக் கட்டிக் கொள்பவர் அதிர்ஷ்டசாலி என புராணம் கூறுகிறது.
அம்சம் #2 
ஒரு ஆண் அல்லது பெண்ணின் நெற்றியில் மூன்று கோடுகள் இருந்தால், அவர்களை திருமணம் செய்து கொள்பவர்கள் அதிர்ஷ்டசாலியாம். சாமுந்திரா சாஸ்திரத்தில், இம்மாதிரியான மக்கள் சந்தோஷமான மற்றும் ஆரம்பரமான வாழ்க்கையை வாழ்வார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அம்சம் #3 
பெண்ணின் சருமம் இயற்கையாகவே பொலிவோடும், மென்மையாகவும் இருந்தால், அப்பெண் பெயரோடும், புகழோடும் வாழ்வார்களாம். மேலும் இம்மாதிரியான பெண்ணை திருமணம் செய்து கொள்பவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலியும் கூட.

அம்சம் #4 
வாழ்க்கைத் துணையாக வருபவரின் பற்கள் வெண்மையாகவும், நல்ல வடிவிலும் இருந்தால், அவர்கள் நல்ல சௌகரியமான வாழ்க்கையை வாழ்வார்களாம்.

அம்சம் #5 
ஒரு பெண் கூர்மையான மூக்கு, நீளமான காதுகள் மற்றும் வில் போன்ற புருவம் கொண்டிருந்தால், அப்பெண் அதிர்ஷ்டசாலியாக கருதப்படுகிறாள். இந்த மாதிரியான பெண்ணை திருமணம் செய்து கொண்டால், அப்பெண்ணுடன், அதிர்ஷ்டமும் வீட்டில் கொட்டுமாம்.

அம்சம் #6 
ஒரு பெண்ணின் பாதங்கள் வெளிரிய நிறத்தில் இல்லாமல், சிவப்பு நிறத்தில் இருந்தால், அவள் லட்சுமி தேவியின் அம்சமாக கருதப்படுகிறாள். இந்த மாதிரியான பெண்ணை திருமணம் செய்து கொண்டால், லட்சுமி தேவியே வீட்டில் குடியிருக்க வந்ததற்கு சமமாம்.
அம்சம் #7 
வாழ்க்கைத் துணையின் குரல் இனிமையாகவும், மென்மையாகவும் இருந்தால், அவர்கள் சரஸ்வதி தேவியின் ஆசீர்வாதம் பெற்றவர்கள் மற்றும் இவர்களை திருமணம் செய்து கொண்டால், வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.







Post A Comment
  • Blogger Comment using Blogger
  • Facebook Comment using Facebook
  • Disqus Comment using Disqus

No comments :