ஒரே வாரத்தில் வழுக்கை தலையில் முடி வளர ஓர் அற்புத இயற்கை மருத்துவம்!

ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி முடி கொட்டுதல், வழுக்கை விழுதல் என்பது ஒரு பெரும் பிரசனையாக உள்ளது. இவை மனதளவிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. வழுக்கைத் தலை வருவதற்கு மரபணுக்கள் காரணமாக இருந்தால், அதை சரிசெய்வதென்பது முடியாத காரியம். ஆனால் இதர காரணங்களான மன அழுத்தம், ஊட்டச்சத்து குறைபாடு, கெமிக்கல் உபயோகங்கள் போன்றவை இருந்தால், ஒருசில இயற்கையான சிகிச்சைகளின் மூலம் வழுக்கைத் தலையிலும் முடியை வளரச் செய்யலாம்.
இந்த இயற்கை முறையை பின்பற்றி அவற்றைத் தொடர்ந்து பின்பற்றி வந்தால், நிச்சயம் விரைவில் வழுக்கையில் முடி  வளர்வதைக் காணலாம். பட்டையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின்கள் மற்றும் இதர உட்பொருட்கள்,  ஸ்கால்ப்பில் நிலையை மேம்படுத்தும். மேலும் இது பாதிக்கப்பட்ட தலைமுடியை சரிசெய்வதோடு, வலிமைப்படுத்துவதுடன்,  தலைமுடியின் வளர்ச்சியையும் தூண்டும்.

ஆலிவ் ஆயிலில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் தலைமுடியை மென்மையாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளும்.  முக்கிய
மாக இதில் உள்ள பூஞ்சை எதிர்ப்பு பொருட்கள், ஸ்கால்ப் மற்றும் தலைமுடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தடுக்கும்.

இதை செய்ய தேவையான பொருட்கள்: பட்டை, ஆலிவ் ஆயில், தேன் போதுமானது. இத்னை செய்ய முதலில் ஆலிவ்  ஆயிலை சூடேற்றி, பின் அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் பட்டை மற்றும் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ள  வேண்டும். பின்பு தயாரித்து வைத்துள்ளதை, ஸ்கால்ப்பில் படும்படி நன்கு தடவி மசாஜ் செய்து, 15 நிமிடம் ஊற வைத்து பின்  தலையை அலச வேண்டும்.

இந்த மாஸ்க்கை அடிக்கடி ஸ்கால்ப்பில் தடவி வந்தால், ஸ்கால்ப்பில் உள்ள பாதிக்கப்பட்ட செல்கள் புதுப்பிக்கப்பட்டு, தலைமுடியின் வளர்ச்சி விரைவில் தூண்டப்படுவதைக் காணலாம்.

இரண்டாவது டிப்ஸ் சின்ன வெங்காயத்தை அரைத்து வழுக்கை விழுந்த இடத்தில் தேய்த்து ஊற வைத்து 20 நிமிடங்கள் கழித்து  தலைக்கு குளித்து வர முடி வளர்வதை காணலாம். வெங்காயம் சாறு முடி இழப்பு, மற்றும் புதிய முடி வளர நல்லது.
Post A Comment
  • Blogger Comment using Blogger
  • Facebook Comment using Facebook
  • Disqus Comment using Disqus

No comments :