உடல் எடையை குறைப்பதில் கைகொடுக்கும் மருத்துவக் குணம் நிறைந்த முட்டைகோஸ்!

முட்டைகோஸில் பைட்டோ நியூட்ரியண்டுகள் மற்றும் வைட்டமின் ஏ, சி மற்றும் கே போன்ற சத்துக்கள் உள்ளன. இவை  அனைத்தும் உடலில் ஏற்படும் பிரச்சனைகளான புற்றுநோய், இதய நோய் போன்றவை ஏற்படுவதை தடுக்கும்.

* கண் பார்வைக் கோளாறுகளைப் போக்கும். கண் பார்வை நரம்புகளை சீராக இயங்கச் செய்யும். இதில் உள்ள வைட்டமின் ஏ  சத்து கண் பார்வைக்கு சிறந்தது. நரம்புகளுக்கு வலு கொடுக்கும். நரம்புத் தளர்ச்சியைப் போக்கும்.

* மூல நோயின் பாதிப்பைக் குறைக்கும். அஜீரணத்தால் உண்டாகும் வயிற்றுவலியை நீக்கும். சரும வறட்சியை நீக்கும்.  சருமத்திற்கு பொலிவைக் கொடுக்கும். வியர்வைப் பெருக்கியாக செயல்படும். சிறுநீரை நன்கு பிரித்து வெளியேற்றும்.

* இதில் உள்ள நார்ச்சத்து, செரிமான பிரச்சனை, மலச்சிக்கல் போன்றவற்றை குணப்படுத்தும். குறிப்பாக முட்டைகோஸை  சாப்பிடும் போது, அதனை அளவுக்கு அதிகமாக வேக வைத்து சாப்பிட கூடாது. இல்லாவிட்டால், அதில் உள்ள சத்துக்கள்  அனைத்தும் வெளியேறிவிடும்.

* முட்டைகோஸை பச்சையாக சாப்பிடுவதே சிறந்தது. அல்சரால் அவதிப்படுபவர்கள், முட்டைக்கோஸை ஜூஸ் போட்டு  சாப்பிட்டு வந்தால், அல்சரை விரைவில் குணப்படுத்தலாம். ஏனெனில் இதில் அல்சரை குணப்படுத்தும், குளுட்டமைல் அதிக அளவில் நிறைந்துள்ளது. தலைமுடி உதிர்வதைக் குறைக்கும். மயிர்க்கால்களுக்கு பலம் கொடுக்கும்.

* உடலில் அழற்சி அல்லது உட்காயங்களால் பாதிக்கப்பட்டவர்கள் முட்டைகோஸை சாப்பிட்டால், அதில் உள்ள அமினோ ஆசிட்  குளுட்டமைன், அவைகளை குணப்படுத்த பெரிதும் உதவியாக இருக்கும். இதில் உள்ள வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு  மண்டலத்தை வலிமைப்படுத்தி, உடலை நோய்கள் தாக்காதவாறு பாதுகாக்கும்.

* எடையைக் குறைக்க மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த நினைத்தால். முட்டைக்கோஸை உணவில் சேர்த்துக்  கொள்ளுங்கள். இதில் பைட்டோ-நியூட்ரியண்ட்டுகள் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், நீண்ட நேரம் பசியெடுக்காமல் வைப்பதுடன், தொப்பை வருவதையும் தடுக்கும்.

Post A Comment
  • Blogger Comment using Blogger
  • Facebook Comment using Facebook
  • Disqus Comment using Disqus

No comments :