பாகற்காயின் மகிமை

நோய் வந்தவுடனே மருத்துவரிடம் ஓடுவதை விட, இயற்கையாக கிடைக்கும் மூலிகைகளை கொண்டே குணப்படுத்தலாம். இவை மாத்திரைகளை போல் உடனடி பலன் தரவிட்டாலும் நாளடைவில் நோய்களை குணமாக்கும் வல்லமை படைத்தது.

அதுபோல் ஒரு மூலிகை தான் தூதுவளை. இதனை தூதுளம், தூதுளை என்றும் அழைப்பர். இந்த மூலிகை செடி ஊதாநிறப் பூக்களையும், உருண்டையான பச்சை நிறக் காய்களையும்(சுண்டைக் காய்) கொண்டது.
இந்த மூலிகையின் வேர் முதல் பழம் வரை எல்லா பாகமும் அதிக பயன்களை கொண்டது. தூதுவளையின் மகத்துவங்கள்
* தூதுவளை இலையைப் பிழிந்து எடுத்து சாற்றை 1 அல்லது 2 துளி காதில் விட்டால், காதுவலி மற்றும் காதில் சீழ் வடிதல் ஆகியவை குணமடையும்.

* இந்த இலையை நெய்யில் வதக்கி துவையலாகவோ அல்லது குழம்பாகக் கடைந்து சாப்பிட்டால், நெஞ்சில் கட்டிருக்கும் கபம் நீக்கி உடல் பலமடையும்.
* இதன் இலைச் சாற்றை சம அளவு நெய்யில் காய்ச்சிக் காலை மாலை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமா மூச்சுத் திணறலில் உள்ளிட்ட நோய்கள் குணமடையும்.
* நாள்தோறும் இதன் பூவை பாலில் போட்டு சக்கரை சேர்த்து பருகினால் உடல் பலமடைவதுடன், வசீகர அழகையும் பெறலாம்.
* இந்த இலையில் ரசம் செய்து சாப்பிட்டால் உடல்வலி, நுரையீரல் கோளாறுகள் குணமடையும். * தூதுவளை கீரையை சமைத்து சாப்பிட்டால், பற்களை வலுவடைவதுடன் பித்த நோயும் குணமாகும்.
* மூக்கில் நீர் வடிதல், வாயில் அதிக நீர் சுரப்பு, பல் ஈறுகளில் நீர்சுரத்தல், சூலை நீர், போன்றவற்றிற்கு தூதுவளை கீரை நல்ல பலனை தரும்.
* தூதுவளை இலையை அரைத்து தண்ணீருடன் சேர்த்து அருந்தி வந்தால் இருமல், இரைப்பு நோய் நெருக்காமல் இருக்கும்.
* தொண்டை வலியால் அவதிப்படுப்பவர்கள், இதன் இலையை கஷாயம் செய்து குடிப்பது நல்லது.
* அறிவுத்திறனை மேம்படுத்துவதுடன், ஜீரண சக்தியை அதிகரிக்கவும் இந்த மூலிகை ஒரு சிறந்த மருந்து.
Post A Comment
  • Blogger Comment using Blogger
  • Facebook Comment using Facebook
  • Disqus Comment using Disqus

No comments :